உத்தர பிரதேசம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட ஸ்ரீ ராமர் கோயிலானது நேற்றைய தினம் கும்பாபிஷேக பூஜை நடத்தப்பட்டு கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது .
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்த இக் கும்பாபிஷேகப் பெருவிழாவில் பிரபலங்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் இராமர் கோவில் திறப்பு விழா குறித்து பாகிஸ்தான் அரசு கண்டன அறிக்கையென்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ” இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்ட இராமர் கோவில், இந்திய ஜனநாயகத்தில் நீண்ட காலத்துக்கு ஒரு கறையாக இருக்கும். அத்துடன் இந்திய முஸ்லிம்களை அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஓரங்கட்டுவதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கின்றன.
இடிக்கும் ஆபத்தில் வாரணாசியின் ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி இத்கா உள்ளிட்ட மசூதிகளின் பட்டியல் அதிகரித்து வருகிறன.
இந்தியாவில் அதிகரித்து வரும் ‘ஹிந்துத்வா’ சித்தாந்தத்தின் அலை மத நல்லிணக்கம் மற்றும் பிராந்திய அமைதிக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.இந்தியாவில் அதிகரித்து வரும் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகள், வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்களை சர்வதேச சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் தீவிரவாத குழுக்களிடமிருந்து இஸ்லாமிய பாரம்பரிய தளங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் நாம் நமது பங்கை ஆற்ற வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.