அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) உயர் நீதிமன்றில் நிறைவடைந்துள்ளது.
கட்சியில் இருந்து நீக்கி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தி அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி இந்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர்களான விஜித் மலல்கொட அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை முடிவடைந்ததுடன் தீர்ப்பு அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
கட்சி யாப்பின் பிரகாரம் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது கட்சியின் செயற்குழுவிற்குரிய பொறுப்பு என்றும் இது கட்சித் தலைவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
எனவே சஜித் பிரேமதாசஇ அவரை பதவி நீக்கம் செய்வதற்கு எடுத்த தீர்மானம் கட்சியின் விதிகளின்படி அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது .