அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (26) காலை கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டி நோக்கி பயணித்த வெளிநாட்டவர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற வேன் லொறியுடன் மோதியதில் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேனில் பயணித்த மேலும் மூன்று வெளிநாட்டவர்கள் காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக லாரி நிறுத்தப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.