ஈரான் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28.01.2024) வெற்றிகரமாக மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மஹாடா (Mahda), கேஹான் – 2 (Kayhan-2) மற்றும் ஹாடேப் ஃ – 1 (Hatef-1) என்ற மூன்று செயற்கைக்கோள்களையே ஈரான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
இந்த செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிக்கு சரக்குகளை அனுப்பும் திறன் ஆகியவற்றை சோதிக்க பயன்படுத்தப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஏவுணைகணை சோதனைகள் கடந்த காலங்களில் பல தோல்விகளைக் கண்டிருந்தன.
எனினும் இஸ்ரேல் காஸா மோதல் நிலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த சோதனை நடவடிக்கையானது பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.