76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தாய்லாந்து பிரதமர்; இந்த ஆண்டு சுதந்திர நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாகவும்இ நாடு அபிவிருத்தியடைந்து வரும் இந்த வேளையில் புதிய உறவுகளை புதுப்பிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் அசோக பிரியந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் நாடு பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் கடந்த வருடம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர்இ இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாக சுதந்திர தின விழாவை பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.