நாம் காசா பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாதிகளை விடுவிக்கவோ மாட்டோம் என்று கூறி, மறைமுக போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது ஹமாஸ் முன்வைத்த இரண்டு முக்கிய கோரிக்கைகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
மேற்குக் கரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் , ”நாங்கள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தை திரும்பப் பெற மாட்டோம், ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை நாங்கள் விடுவிக்க மாட்டோம், இந்த போரின் அனைத்து இலக்குகளையும் அடையாமல் நாங்கள் முடிக்க மாட்டோம். இதன் அர்த்தம் என்னவென்றால் ஹமாஸை அழிப்பதுதான், காசாவானது மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதுதே எமது இலக்கு” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.