தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் இன்று முன்னிலையாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதமை தொடர்பாக வாக்குமூலத்தைப் பெறுவதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்
இதேநேரம் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியசர் சமன் ரத்நாயக்க இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மருந்து மோசடிக்கு காரணமான அனைத்து தரப்பினரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஜனாதிபதியின் தலையீடு அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.