ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி மற்றும் காணொளி காட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (31) கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாத மற்றும் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் 4 பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனத்தை தடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.ரங்காவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.