பீகாரில் ராகுல் காந்தி பயணித்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்’ தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே பீகார்-வங்காள எல்லை அருகே கட்டிஹார் நகரில் வைத்து ராகுல் காந்தி பயணித்த கார் மீது மர்மநபர் ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் குறித்த காரின் பின்பக்கக் கண்ணாடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், இது குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.