காசா மீதான இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களினால் இதுவரையில் 27,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது.
“எமது இஸ்ரேல் ராணுவம் கான் யூனிஸில் பணியை முடித்த பிறகு விரைவில் ரஃபா எல்லையை அடைந்து, அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள ஹமாஸ் பிரிவுகளை அழிக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதக் குழுவின் போரிடும் திறனை கடுமையாக பலவீனப்படுத்தும் என்றும் கேலண்ட் கூறியுள்ளார்”.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும், இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 105 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
எனினும் இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகரை நோக்கி சுமார் 1.9 மில்லியன் பலஸ்த்தீனியர்கள் இடம்பெயர்ந்தனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் இந்த நடவடிக்கையானது தற்போது சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.