இலங்கை அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி சுருண்டுள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிய நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
அதன்படி முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முதலாவது ஓரின் இரண்டாவது பந்தில் இப்ராஹிம் சத்ரான் எல்.பி.டபிள்யூ முறையில் எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து நூர் அலி மற்றும் ரஹ்மட் ஷா ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டம் காரணமாக முதல்பாதி தேநீர் இடைவேளையில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்பின்னர் 46 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நூர் அலி, விஸ்வ பெர்னாண்டோவின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது ஆப்கானிஸ்தான் அணி 14.3 ஓவர்களில் 57 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனை தொடந்து வந்த அணித்தலைவர் ஹமதுல்லா ஷாகிதி 11 ஓட்டங்களையும் மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவரும் ரஹ்மத் ஷா 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க 25 ஆவது ஓவர் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து 90 ஓட்டங்களை ஆப்கான் அணி பெற்றுள்ளது.
தொடந்து மத்திய இடைவேளையை அடுத்து போட்டி ஆரம்பமாக ரஹ்மத் ஷா அரைசதம் அடிக்க அவரோடு இணைந்து சிறப்பாக விளையாடிய ஹமதுல்லா ஷாகிதி 17 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடந்துவந்த நசீர் ஜமால் எவ்வித ஓட்டங்களை எடுக்காமல் பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் அட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின்னர் சிறப்பாக விளையாடிய ரஹ்மத் ஷா, 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 91 ஓட்டங்களை பெற்றிருந்தபோது பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரமவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை அடுத்து தேநீர் இடைவேளையின் போது 5 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக இக்ரம் அலிகில் 21 ஓட்டங்களையும் குவைஸ் அஹமட் 8 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்கத்து இருந்தனர்.
இதன்பின்னர் விஸ்வ பெர்னாண்டோவின் பந்துவீச்சில் 21 ஓட்டங்களை பெற்றிருந்த இக்ரம் அலிகில் ஆட்டமிழந்து வெளியேற ஆபிகானிஸ்தான் அணி 170 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தொடந்துவந்த சியா ஊர் ரஹ்மானும் 4 ஓட்டங்களோடு அட்டமிழந்து வெளியேறினார்.
இதேவேளை குவைசி அஹமட் 21 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க ஆபிகான் அணி 190 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருந்தது. இறுதியாக வந்த வீரர்கள் சிறப்பாக சோபிக்க தவறியதை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் விஸ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்களையும் பிரபாத் ஜெயசூரிய 3 விக்கெட்களையும் அசித பெர்னாண்டோ 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.