இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின், நான்காம்நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது.
இதன்படி தற்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் ஆப்கானிஸ்தான் அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது களத்தில் நஸிர் ஜமால் 7 ஓட்டங்களுடனும் ஓட்டங்களுடனும் நவீட் சத்ரான் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரபாத் ஜெயசூரிய 4 விக்கெட்டுகளையும் அசித்த பெணார்டோ 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், ஆப்கானிஸ்தான் அணி, 10 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
கடந்த 2ஆம் திகதி கொழும்பு- எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 439 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 241 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.