இணையப் பாதுகாப்புச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தவறானவை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்திய பின்னரே இணையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் நடவடிக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சட்டவரைவாளர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதால், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு மாறாக அல்லது அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் எவ்வாறான பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன என்பதை சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் தெரிவிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபாநாயகர் தனது விருப்பத்தின்படி சட்டங்களை இயற்ற முடியும் என்றும் சட்டமூலங்களில் திருத்தங்களை செய்ய முடியுமென தெரிவிக்கப்படும் கருத்துகள், அரசமைப்பு குறித்த அறிவை அவமதிப்பதாக அமைந்துள்ளதெனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.