முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்துக் கொள்வனவு விவகாரம் காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து நேற்றைய தினம் இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.