வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று வீதியை விட்டு விலகி கடையொன்றுக்குள் புகுந்த சம்பவம் நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
A.35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த காரொன்றே, விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது அக்கடையின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டியொன்றையும் குறித்த கார் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.