இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை நிறுத்துவதற்கான கோரிக்கையை மீண்டும் ஹமாஸ் வலியறுத்தியுள்ள நிலையில் இந்த செய்தியை கட்டார் வெளியிட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனும் கட்டாரின் பிரதமரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கட்டர், எகிப்து மற்றும் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட முன்மொழிவுக்கு ஹமாஸ் வழங்கிய பதில், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக அண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
மேலும் போர்நிறுத்த ஒப்பந்தம்ம் மிகவும் அத்தியாவசியமானது என்றும் அதனை அடைய தொடர்ந்து இடைவிடாமல் பாடுபடுவோம் என்றும் அண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
இதேநேரம் மத்தியஸ்தர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் இருப்பதாகவும், காசாவில் நடக்கும் நிகழ்வுகள் பேச்சுவார்த்தையின் போக்கை பாதிக்கும் என்றும் கட்டார் பிரதமர் கூறியுள்ளார்.