பஞ்சு மிட்டாய் தயாரிக்க பயன்படுத்தும் நிறமூட்டியில் விஷத்தன்மை காணப்படுவதால் அதனை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, RHODAMINE-B எனப்படும் நிறமூட்டியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாயை உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நிறமூட்டியானது , பத்தி மற்றும் தீக்குச்சிகளுக்கு நிறமூட்ட பயன்படுத்தப்படுவது என கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளை கவரும் வகையில் ரோஸ் நிறத்தில் விற்பனை செய்யப்படுகின்ற பஞ்சு மிட்டாய் குறித்து பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து , அதனை அதிகளவில் விற்பனை செய்கின்ற வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் , அதனை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என்றும் , விற்பனையை தடை செய்யுமாறும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வலியுறுத்தியுள்ளார்.