என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தீரன் அதிகாரம் ஒன்று , அயலான் , தேவ் , என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் நடிகரும் , தயாரிப்பாளருமான ஜெக்கி பாக்னானியை காதலித்து வருவதாக அறிவித்திருந்தார். தற்போது அவரையே திருமணம் செய்து கொள்ள போகிறார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி நெருங்கி உறவுகள் , நண்பர்களுக்கு மத்தியில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.