நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களில் 3 சதவீதமானோர் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தேசிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் படி ” நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பாடசாலை மாணவர்களில் 54.9 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 53.2 சதவீதமானோர், பாடசாலைக்கான புதிய உபகரணங்களை கொள்வனவு செய்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளனர்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.