சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரபுக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகாததுடன், வழக்குடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.