சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்க முடியாத நிலை எற்படுமாயின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அது பாரிய பின்னடைவாக அமையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரளுமானால் பெரும்பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் நாட்டின் வளர்ச்சி பாதை, முதலீட்டாளர்களின் எதிர்மறையான நிலைபாடுகள் தோற்றும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
நாடு தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ள அதேவேளை பொருளாதார முன்னேற்றத்திற்காக நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும் குறுகிய காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி குறைவானதாகவே காணப்படும் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.