ரஷ்யாவின் எதிா்க்கட்சித் தலைவர்அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான அரசுக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் 19-வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அலெக்ஸி நவால்னி, கடந்த 16 ஆம் திகதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மறைவையடுத்து ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் உள்ள நினைவிடங்களில் நவால்னிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் அந்நாட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட 400 க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைதுசெய்யுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், நவால்னியின் திடீா் மரணம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.