அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடருமாயின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியிலேயே உள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நாடாளுமன்றில் சில அடக்குறை சட்டமூலங்களை நிறைவேற்றி வருகின்றது.
மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகள் தொடருமாயின் எதிர்வரும் 190 நாட்களுக்குள் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
அப்போது நாட்டு மக்கள் அந்த அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள்” என கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.