இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் 4 ஆவது போட்டி ரஞ்சியில் 23 ஆம் திகதி ஆரம்பமானது.
நேற்றைய 3 ஆம் நாளின்போது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள இந்திய அணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது 3 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனை அடுத்து நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிய நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ட்ரிங்க்ஸ் பிரேக்கை அடுத்து வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 353 ஓட்டங்களை பெற்றது.
தொடந்து பதிலுக்கு தனது முதலாவது இனிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ஓட்டங்களை குவிக்க 46 ஓட்டங்கள் முன்னிலையோடு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இனிங்ஸில் விளையாடியது.
நேற்றைய 3 ஆம் நாளின்போது இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள இந்திய அணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடந்து குறித்த வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்ததோடு டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துருவ் ஜூரல் தெரிவு செய்யப்பட்டார்.