நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இணைய பாதுகாப்பு சட்டதிற்கு சபாநாயகர் சான்றளித்தமை தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இணைய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சட்டமூலமொன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட வேண்டுமாயின் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
இணையவழி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதன் ஊடாக சபாநாயகர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார்.
ஏனென்றால் சட்டமூலமொன்று சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின்
நியதிகளுக்கமைய நாடாளுமன்றம் செயற்பட வேண்டும்.
சபாநாயகர் அதனை செய்யவில்லை. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.” என கூறியுள்ளார்.