பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட இலங்கை கோள் மண்டலம் நாளை (27) முதல் மார்ச் 12 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழியங்கும் கோள் மண்டலம் புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு கோள் மண்டலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















