ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் அண்மையில் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் விமானசேவையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அதானி நிறுவனம் மட்டுமல்ல சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் விமான நிலையத்தை கையகப்படுத்தக் காத்திருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நிறுவனத்தின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய நிலையில் அதனை இலவசமாக பெற்றுக்கொள்வதற்குக்கூட எந்த நிறுவனமும் முன்வராத சூழ்நிலையே காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.