இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில், இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
அதன்படி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், ருமேனிய தூதுவர் டொமினா ஸ்டெலுசாவுக்கும் இடையில் அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், இருநாடுகளுக்கும் இடையில் கல்வி, விவசாயம், தொடருந்து மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .














