புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட உறுப்பினர் சரத் சந்திரசிறி முத்துக்குமாரனவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறப்பும் விதமாகவே சரத் சந்திரசிறி முத்துக்குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சரத் சந்திரசிறி முத்துக்குமாரன 38 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். மேலும், எதிர்வரும் நாட்களில் புதிய நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சரத் சந்திரசிறி முத்துக்குமாரன முன்னாள் சிறைச்சாலை பிரதி அமைச்சராக பதவி வகித்திருந்ததுடன் தற்போது வட மத்திய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.