உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு பாரியளவான ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.
அதன்படி கடந்த ஜீலை மாதத்திலிருந்து இதுவரை சுமார் 6,700 கொள்கலங்களில் மில்லியன் கணக்கான துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வடகொரியா அனுப்பி வைத்துள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் சின் வென் சிக் தெரிவித்துள்ளார்.
ஆயுத வழங்கலுக்கு பதிலீடாக உணவுப் பொருட்களை ரஷ்யா, வடகொரியாவிற்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வட கொரிய ஆயுத தொழிற்சாலைகள் குறைந்த மூலப்பொருள் மற்றும் மின்சார குறைவு காரணமாக தமது வினைதிறனை இழந்துள்ளதாகவும் தென்கொரியா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.