அனுமதிப் பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளைக் கடத்திச் சென்ற நால்வரை புதுக்குடியிருப்புப் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த மாடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.