மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களை எதிர்வரும் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டள்ள சம்பளம் தொடர்பான காரணிகளை விளக்குவதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பளம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு ஆளும் மற்றும் எதிர்தரப்பின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு மத்திய வங்கியின் ஆளுநரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
எனினும் புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைவாக, தற்போது மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளதால் சம்பள விவகாரத்தில் தலையிட முடியாது என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.