நாட்டில் இன்று களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.