சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிஸாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது இந்திய அரசால் சட்டப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்தனின் உடலத்தை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியாத இழுபறி நிலையில் இருந்தது. இது கூட இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.