மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை 70 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில் அது தொடர்பான விளக்கங்களை பெறுவதற்காகவே அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை கூடிய போது மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரித்துள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இவ்விடயம் பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து இது குறித்து ஆராய மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட தலைவர்களை அமைச்சரவைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.