ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலை மீது ஆயுதமேந்திய குழுவொன்று அண்மையில் நடத்திய தாக்குதலில் 3,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள குறித்த சிறைச்சாலையில், சிறைக் கைதிகளை விடுவிக்கும் விதமாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற அந்நாட்டு ஜனாதிபதி ஜோவெனல் மோஸசின் கொலை வழக்குடன் தொடர்புடைய நபர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.