யாழில் உள்ளூர் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராக புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ”கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை முற்றாக புறக்கணித்து இலாப நோக்கில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பண்ணைகளை அமைக்க கடற்தொழில் அமைச்சு அனுமதி அளித்து வருவதாக மீனவர்கள் குற்றம் சுமத்தினர்.
அத்துடன் பாரம்பரிய மீன்பிடி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் எனவும், சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க வேண்டும் எனவும் அழிக்கப்பட்டு வரும் கால்நடை வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.