மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெகு சிறப்பாக மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்டு ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள உயிர் லிங்கத்திற்கு, அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய பாலறு பால புஸ்கரணி தீர்த்தக்கங்கையில் இருந்து தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் செய்யும் சிறப்பு நிகழ்வும் இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.