வடமேல் மாகாண சபையின் பிரதான செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
வடமேல் மாகாண பிரதான செயலாளராக கடமையாற்றிய ரஞ்சித் ஆரியரத்ன தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன மற்றும் வடமேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைகள் மற்றும் கோரிக்கைகளை அவர் புறக்கணித்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவரது பதவி நீக்கத்திற்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
மேலும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவின் பதவி நீக்கத்தை ரத்து செய்யுமாறு
வட மேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் வடமேல் மாகாண அரசாங்க உயர் அதிகாரிகள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் ஒருவர், பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.