ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹைட்டி பிரதமர் தற்போது போர்ட்டோ ரிக்கோவில் இருப்பதாகவும், அவர் திரும்பி வர தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆயுதக் குழுக்கள் கூறுகின்றன.
மேலும் கூலிப்படையினரால் நாட்டின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஏரியல் ஹென்றி ஜூலை 2021 இல் ஹைட்டி பிரதமராக பதவி ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.