இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலைகள் 100 – 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.
அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 15 ஆம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு அமுழுக்கு வருமென அவர் மேலும் குறிப்பிட்டார்