இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படமொன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனையடுத்து மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.


















