நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதாகக் கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளின் கைப்பொம்மையாகியுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாட்டை பாதுகாப்பதற்காகவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவே அனைத்து வழிகளிலும் நாம் ஒத்துழைப்பு வழங்கினோம். எதிர்வரும் காலங்களிலும் அவ்வாறே செயற்படுவோம். இந்த நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் நாம் யாருக்கும் அடிமைகளாக செயற்பட வேண்டிய தேவைகிடையாது.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதாக கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளின் கைப்பொம்மையாகியுள்ளது. இது மிகவும் தவறானது. நாட்டின் இறைமையை பாதுகாக்கக்கூடிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
ஊழலை ஒழித்து நாட்டை கட்டியெழுப்புவது எமது கூட்டணியின் கொள்கையாகும். இந்த நாட்டின் ஊழல்களை 24 மணிநேரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவந்து 25 ஆவது மணித்தியாலத்தில் இருந்து ஊழலற்ற புதிய பயணத்தை ஆரம்பிக்க முடியும்” இவ்வாறு ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.