ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் (Reykjanes) தீபகற்பத்தில் கடந்த மூன்று மாதங்களில் இருந்து நான்காவது முறையாக எரிமலை வெடித்துள்ளது.
ரெய்க்ஜேன்ஸ் (Reykjanes) தீபகற்பத்தில் உள்ள ஸ்டோரா ஸ்கோக்ஃபெல் மற்றும் ஹகாஃபெல் (stora Skogfell and Hagafell) இடையே எரிமலை வெடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஐஸ்லாந்தின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐஸ்லாந்தின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.