சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பணத்தை அச்சடித்து இந்நாட்டில் பணவீக்கத்தை ஊக்குவித்ததன் காரணமாக இந்நாட்டின் நிதிக்கொள்கை குடும்பமயமானது.
அதனால்தான் அரசியல் தலையீடுகள் இன்றி நடைமுறைப்படுத்துவதற்காக, மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இதனைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதம் வரை அதிகரித்துக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது எனவும், இவ்வாறு செயற்பட மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
ஆகையால், மத்திய வங்கி தங்களின் ஊழியர்களுக்கு அநியாயமான முறையில் அதிகரித்துள்ள சம்பளத்தை மீளத் திருப்பிக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ மேலும் வலியுறுத்தினார்.