இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்ச்சியாக மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி புதுடில்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் துகள்கள் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை மட்டத்தை அடைந்துள்ளதாகவும் 2023 ஆம் ஆண்டின் உலக காற்று தர அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
மேலும் சுவாச பாதிப்பிற்குட்பட்டு குழந்தைகள் உள்ளிட்ட பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை காற்று மாசடைவானது, இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் வசிப்பவர்களின் ஆயுட்காலத்தை 10 ஆண்டுகளால் குறைக்கும் என அமெரிக்க ஆய்வொன்றில் தகவல் வெளியானமையும் குறிப்பிடத்தக்கது.