தமது வாடிக்கையாளர்களை அவதானமாக இருக்குமாறு மக்கள் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது”வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெறும் வகையில் மோசடியான குறும் செய்திகள் தொலைபேசிகளில் பரப்பப்பட்டு வருகின்றன.
எனவே இவ்வாறான போலியான குறுஞ்செய்திகளை நம்பி வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் காட் விவரங்கள் அல்லது OTP எண்களை வழங்க வேண்டாம்” இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.














