ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு நாளையத்தினம் (25) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி முன்னெடுக்கப்படுமென மத்திய மாகாண ஆளுநரின் செயளாளர் M .W.M .M மடஹபொல தெரிவித்துள்ளார்.