உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பத்துடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக வழக்கினை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்திருந்தார்.
மேலும் இது தொடர்பான இரண்டு ரிட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார சுட்டிக்காட்டியிருந்தார்.
பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.