ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற நிறைவேற்றக்குழுக் கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ இதுவரை தேசிய அமைப்பாளராகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.